Actions

Joomla info page/ta-LK

From Joomla! Documentation

< Joomla info page
Revision as of 12:44, 3 April 2013 by Imanickam (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

Contents

தமிழ்–இலங்கை

Joomla என்றால் என்ன?

Joomla ஆனது பரிசு பெற்ற ஒரு உள்ளடக்க நிர்வாகத் தொகுதி (CMS-Content Management System) ஆகும். இது, நீங்கள் இணையத்தளங்கள் மற்றும் சக்தி வாய்ந்த இணைப்பு நிலைச் செயலிகளை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. Joomla இலுள்ள சுலபமான உபயோகம் மற்றும் மெருகேற்றும் தன்மை போன்ற பல அம்சங்கள் இணையத்தள மென்பொருட்களில் Joomla ஐ மிகவும் புகழ் பெற்ற மென்பொருளாக ஆக்கின. Joomla ஆனது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கக் கூடிய ஒரு திறந்த மூல தீர்வாக(open source solution) இருப்பதே எல்லாவற்றிலுமிருந்து சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகும். Joomla இன் பயன்கள்:

  • சுலபமான நிறுவல்
  • எளிமையான இணையத்தள பராமரிப்பு
  • மேன்மை மிகுந்த பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மை
  • சக்தி வாய்ந்த இலவச மற்றும் வர்த்தக நிமிர்த்த நீட்சிகள்
  • உங்களுடைய இணையதளத்தின் தோற்றத்தை இலகுவாக மாற்றக்கூடிய நிறையப் படிம அச்சுகள்

Joomla ஐ எங்கிருந்து பெறுவது?

நீட்சிகளை எங்கிருந்து பெறுவது?

  • Joomla இற்கான நீட்சிகளை தரப்பட்டுள்ள இணையத்தள முகவரியூடாக பதிவிறக்குக: http://extensions.joomla.org/

Joomla இற்கான ஆவணங்களை எங்கிருந்து பெறுவது?

Joomla இற்கான உதவியை எங்கிருந்து பெறுவது?

பிராந்திய நிகழ்ச்சிகள் / Joomla-தினங்கள்

உலகளாவிய முறையில் உள்ளூர் சமூகங்கள் Joomla நாட்களை ஏற்பாடு செய்கின்றன. Joomla நாளானது Joomla பயனாளர்கள் மற்றும் திட்டங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் ஒரு நிகழ்வு. இது, பொதுவாக பிராந்திய பார்வையாளர்களை ஈர்க்கிறது. மேலும் தகவல்: http://community.joomla.org/events/joomla-days.html

Joomla பயனாளர் குழுக்கள் (JUG -Joomla User Groups)

உள்ளூர் Joomla பயனர் குழுக்கள் (Joomla User Groups - JUG) ஆனது புதிய மக்களைச் சந்திக்க, திட்டங்களுக்கான உதவி பெற, அல்லது பிற Joomla பயனர்களுடன் உங்கள் சொந்த அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். Joomla எங்கும் உள்ளது; ஆகவே, உங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு JUG உள்ளதா என்று பார்க்கவும். இல்லை என்றால், தாங்கள் ஒன்றைத் துவக்க முயற்சி செய்யலாம்.

Joomla இற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்வது?

  • எந்தவொரு Joomla! கருத்துக்களத்திலுமுள்ள வினாக்களுக்கு விடையளிக்குக ("Joomla இற்கான உதவியை எங்கிருந்து பெறுவது?" என்பதில் இணைக்கப்பட்டுள்ளது)
  • ஒரு Tutorial அல்லது ஆவணத்தை எழுதுக அல்லது மொழி பெயர்ப்புச் செய்க ("Joomla இற்கான ஆவணங்களை எங்கிருந்து பெறுவது?" என்பதில் இணைக்கப்பட்டுள்ளது)
  • ஒரு நீட்சியை அல்லது படிம அச்சை அபிவிருத்தி செய்க
  • ஒரு Issue அறிக்கைக்கு ஒரு குறிப்புரையைச் சேர்க்க அல்லது சோதிக்குக: http://docs.joomla.org/How_do_you_report_a_bug%3F
  • ஒரு Joomla! தொழிற் குழுவில் இணைக
  • ஒரு Joomla! நிகழ்ச்சியில் உதவி புரிக
  • வேறு வழிகளில் பங்களிப்புச் செய்வதற்கு http://contribute.joomla.org/ இனைப் பார்க்க